/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து சட்டசபையில் விவாதிக்க பரிந்துரைகாலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து சட்டசபையில் விவாதிக்க பரிந்துரை
காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து சட்டசபையில் விவாதிக்க பரிந்துரை
காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து சட்டசபையில் விவாதிக்க பரிந்துரை
காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து சட்டசபையில் விவாதிக்க பரிந்துரை
ADDED : ஆக 16, 2011 11:26 PM
ராமநாதபுரம் : தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள ஐந்து லட்சம்
பணியிடங்களை நிரப்புவதற்காக சட்டசபையில் மானியகோரிக்கையின் போது விவாதிக்க
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் மூலம் பரிந்துரைக்க
அரசு ஊழியர் சங்கம் முயற்சித்து வருகிறது.தமிழக அரசு துறைகளில் ஐந்து
லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
பணிகளில் தொய்வு நிலை
ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் மானியகோரிக்கை விவாதத்தில் காலிபணியிடங்களை
நிரப்புவது குறித்து விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு
ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இச்சங்கத்தின் மாநில பொது செயலாளர்
சீனிவாசன் கூறியதாவது: காலிபணியிடங்கள் நிரப்படாமல் உள்ளதால் அரசு
திட்டப்பணிகளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணியிடங்களை நிரப்பக்கோரி
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் குற்றாலிங்கத்திடம்
மனு கொடுக்க உள்ளோம். சட்டசபை மானியகோரிக்கை விவாத்தில் நல்ல முடிவு
கிடைக்கும் என நம்புகிறோம், என்றார்.