/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கள்ளக்குறிச்சி மாவட்டம் அமைக்க பா.ம.க., பொதுக்குழு தீர்மானம்கள்ளக்குறிச்சி மாவட்டம் அமைக்க பா.ம.க., பொதுக்குழு தீர்மானம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் அமைக்க பா.ம.க., பொதுக்குழு தீர்மானம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் அமைக்க பா.ம.க., பொதுக்குழு தீர்மானம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் அமைக்க பா.ம.க., பொதுக்குழு தீர்மானம்
ADDED : ஆக 06, 2011 02:26 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் பா.ம.க., மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது.விழுப்புரம் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு துணை பொது செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.
நகர மாவட்ட செயலாளர் பழனிவேல் வரவேற்றார். மாநில தலைவர் மணி, துணைத் தலைவர் தங்கஜோதி, முன்னாள் எம்.பி., தன்ராஜ், எம்.எல்.ஏ., கணேஷ்குமார், மாஜி எம்.எல்.ஏ., கலிவரதன் முன்னிலை வகித்தனர். கட்சி நிறுவனர் ராமதாஸ் சிறப்புரையாற்றினார்.செஞ்சி தொகுதி பா.ம.க., வேட்பாளர் கணேஷ்குமாரை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தல், சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.மாவட்ட தலைவர்கள் துரைமுருகன், சங்கர், செயலர் ஏழுமலை, இளைஞரணி சிவக்குமார், ஒன்றிய செயலர்கள் சம்பத், ரத்தினம், துரை, நகர செயலர் மலர்சேகர், சுரேஷ், சீனுவாசன், ஆதித்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.