ADDED : ஆக 05, 2011 01:26 AM
சென்னை : மற்றொரு வழக்கில், 'சன் பிக்சர்ஸ்' நிர்வாக அதிகாரி சக்சேனாவுக்கு, சென்னை ஐகோர்ட் ஜாமின் வழங்கியது.
நடிகர் தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' படத்தின் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் என்பவர், கோடம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். 'சன் பிக்சர்ஸ்' நிர்வாக அதிகாரி சக்சேனா, மூன்று கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாகவும், மிரட்டியதாகவும் கூறியிருந்தார். இவ்வழக்கில், சக்சேனா கைது செய்யப்பட்டார். ஜாமின் மனுவை, முதன்மை செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது. ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில் சக்சேனா மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி ராஜசூர்யா விசாரித்தார். சக்சேனாவுக்கு ஜாமின் வழங்கி நீதிபதி ராஜசூர்யா உத்தரவிட்டார்.