/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஜப்தி செய்தபஸ்களை மீட்பதில் மெத்தனம் : போக்குவரத்து கழகத்திற்கு இழப்புஜப்தி செய்தபஸ்களை மீட்பதில் மெத்தனம் : போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு
ஜப்தி செய்தபஸ்களை மீட்பதில் மெத்தனம் : போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு
ஜப்தி செய்தபஸ்களை மீட்பதில் மெத்தனம் : போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு
ஜப்தி செய்தபஸ்களை மீட்பதில் மெத்தனம் : போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு
ADDED : ஜூலை 27, 2011 03:06 AM
ராமநாதபுரம்:நிதி பற்றாக்குறை காரணமாக ஏழுக்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டு மாத கணக்கில் கோர்ட்டில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் பஸ்கள் பழுதடைந்து வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் விபத்து வழக்குகளில் பல லட்சம் ரூபாய் இழப்பீடு தொகைகள் வழங்காததால் மாதத்திற்கு குறைந்தபட்சம் ஐந்துக்கும் மேற்பட்ட பஸ்களை கோர்ட் உத்தரவுபடி ஜப்தி செய்யப்படுகிறது. உரிய இழப்பீடு தொகையை வழங்க போக்குவரத்து கழகம் முன்வராததால் தற்போது ஏழுக்கும் மேற்பட்ட பஸ்கள் கோர்ட் வளாகத்தில் மாத கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த இடம் பஸ் ஸ்டாண்ட் போல மாறிவிட்டது. ஒரே இடத்தில் பஸ்கள் நிற்பதால் பஸ்கள் பழுதாவதுடன், வருமானமும் பாதிக்கப் பட்டுள்ளது. ராமநாதபுரம் கோட்டமேலாளர் ஆறுமுகம் கூறியதாவது: நிதி பற்றாக்குறையால்தான் உடனடியாக பஸ்களை மீட்க முடியவில்லை. தற்போது ஒவ்வொரு பஸ்சாக இழப்பீடு தொகை செலுத்தி மீட்டு வருகிறோம், என்றார்.