/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ஆறாம் வகுப்பு புத்தகத்தை படிக்க முடியாத 8ம் வகுப்பு மாணவிகள்: கலெக்டர் கண்டிப்புஆறாம் வகுப்பு புத்தகத்தை படிக்க முடியாத 8ம் வகுப்பு மாணவிகள்: கலெக்டர் கண்டிப்பு
ஆறாம் வகுப்பு புத்தகத்தை படிக்க முடியாத 8ம் வகுப்பு மாணவிகள்: கலெக்டர் கண்டிப்பு
ஆறாம் வகுப்பு புத்தகத்தை படிக்க முடியாத 8ம் வகுப்பு மாணவிகள்: கலெக்டர் கண்டிப்பு
ஆறாம் வகுப்பு புத்தகத்தை படிக்க முடியாத 8ம் வகுப்பு மாணவிகள்: கலெக்டர் கண்டிப்பு
ADDED : ஜூலை 26, 2011 12:28 AM
துறையூர்: ''உங்கள் பிள்ளைகள் இப்படி இருந்தால் ஒத்துக் கொள்வீர்களா?,'' என்று சரியாக படிக்காத மாணவிகள் குறித்து ஆசிரியர்களிடம் கலெக்டர் ஜெயஸ்ரீ அதிரடியாக கேள்வி எழுப்பி திணறடித்தார்.
துறையூர் அருகே பச்சமலையில் நடந்த மனுநீதி நாள் விழாவில் பங்கேற்க வந்த மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ, எம்.எல்.ஏ., இந்திராகாந்தி வந்தனர். அவர்களிடம் கீரம்பூர், மூலக்காடு, பழமலை, தோனூர் ஆகிய வழியோர கிராம மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை தந்தனர். தோனூர் கிராமத்தில் மக்கள் குடிநீர் பயன்படும் கிணற்றை பார்வையிட கேட்டுக்கொண்டனர். மலைப்பாதையில் இறங்கி நடந்து சென்ற கலெக்டரும், எம்.எல்.ஏ.,வும் குடிநீருக்கு பயன்படும் கிணற்றை பார்வையிட்டனர். அதன்பின் கலெக்டர் கிணற்றை ஆழப்படுத்தி, சுற்றுச்சுவர் கட்டி, தூய்மையான குடிநீர் வழங்க ஒருவாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சின்ன இலுப்பூரிலுள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது மாணவ, மாணவிகள் மரத்தடியிலும், ஒரே அறையிலும் அமர்த்தி பாடம் நடத்தினர். ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளிடம் என்னென்ன உணவு வழங்கப்படுகிறது? என கேட்டார். ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தை எட்டாம் வகுப்பு மாணவி படிக்க தடுமாறியதைடுத்து ஆசிரிய, ஆசிரியைகளிடம் உங்கள் பிள்ளைகள் இப்படி இருந்தால் ஒத்துக்கொள்வீர்களா? என கலெக்டர் அறிவுரை கூறி தவறுகள் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.