Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/22,000 பள்ளி குழந்தைகளுக்கு இலவச மஞ்சள் காமாலை தடுப்பூசி

22,000 பள்ளி குழந்தைகளுக்கு இலவச மஞ்சள் காமாலை தடுப்பூசி

22,000 பள்ளி குழந்தைகளுக்கு இலவச மஞ்சள் காமாலை தடுப்பூசி

22,000 பள்ளி குழந்தைகளுக்கு இலவச மஞ்சள் காமாலை தடுப்பூசி

ADDED : ஜூலை 24, 2011 03:37 AM


Google News
சென்னை:ஆட்கொல்லி நோயான, 'ஹெப்படைடீஸ் பி' மஞ்சள் காமாலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை, வரும் 31ம் தேதி, சென்னை மியாட் மருத்துவமனையில், நடிகர் விக்ரம் துவக்கி வைக்கிறார். அப்போது, சென்னையில் 14 பள்ளிகளைச் சேர்ந்த 22 ஆயிரம் குழந்தைகளுக்கு, இலவச தடுப்பூசி போடப்படுகிறது.

இம்மருத்துவமனை நிறுவனர் டாக்டர் மோகன்தாஸ் கூறியதாவது: 'ஆயுள் காக்க, கல்லீரல் ஆரோக்கியம் காக்க' என, 'ஹெப்படைடீஸ் பி' மஞ்சள் காமாலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார இயக்கத்துக்கு, மியாட் மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பிரசாரத்தை, நடிகர் விக்ரம் துவக்கி வைக்கிறார்.'ஹெப்படைடீஸ் பி' மஞ்சள் காமாலையால், இந்தியாவில் 4 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் கிருமி, ரத்தம் மூலம் பரவக் கூடியது. இந்த கிருமி, உடலில் புகுந்து, கல்லீரலைத் தாக்கி செயலிழக்கச் செய்யும் வாய்ப்புள்ளது. கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, மரணம் ஏற்படும் அபாயம் உண்டு.

இந்த வைரஸ் பரவாமல் தடுக்க, தடுப்பூசி உள்ளது.

விலை அதிகம் என்பதால், அனைவரும் எளிதில் போட்டுக் கொள்ள இயலாது. எனவே, காமாலை விழிப்புணர்வு பிரசார தினமான வரும் 31ம் தேதி, சென்னையில் 14 பள்ளிகளைச் சேர்ந்த, 22 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும்.

இரண்டாவது தடுப்பூசி, ஒரு மாதம் கழித்தும், மூன்றாவது தடுப்பூசி, 6 மாதங்கள் கழித்தும் போடப்படும். மஞ்சள் காமாலை குறித்து, கிராமப்புறங்களில் போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே, இந்த கொடிய நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்பட எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.இவ்வாறு டாக்டர் மோகன்தாஸ் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us