தேயிலை தோட்டத்தில் காட்டெருமைகள் உலா
தேயிலை தோட்டத்தில் காட்டெருமைகள் உலா
தேயிலை தோட்டத்தில் காட்டெருமைகள் உலா
ADDED : ஜூலை 23, 2011 12:01 AM
வால்பாறை : வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் உலா வந்த காட்டு எருமைகளை கண்ட தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.
வால்பாறையில் சமீப காலங்களில் யானைகள், காட்டெருமைகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. வால்பாறை அடுத்துள்ள, முடீஸ் - கெஜமுடி எஸ்டேட் மேல் பிரட்டு பகுதியில், கடந்த சில நாட்களாக. 10க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் இரவு நேரத்தில், குடியிருப்பு பகுதியில் நுழைவதும், ரோட்டில் நடந்து செல்பவர்களை விரட்டுவதும் போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று காலை இந்த எஸ்டேட் 3ம் நம்பர் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் தேயிலை பறித்துக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென்று வனப்பகுதியிலிருந்து, காட்டெருமைகள் கூட்டம் தோட்டத்தில் நுழைந்தது. இதைக்கண்ட தொழிலாளர்கள், தேயிலை பறிக்கும் பணியை விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் அப்பகுதி தொழிலாளர்கள் திரண்டு, காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். காட்டு யானைகள் தொல்லையால் இப்பகுதி தொழிலாளர்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது காட்டெருமையும் சேர்ந்து உலா வருவதால் பீதியடைந்துள்ளனர்.