சிறுதொழில் மானியம் அதிகரிக்க வாய்ப்பு
சிறுதொழில் மானியம் அதிகரிக்க வாய்ப்பு
சிறுதொழில் மானியம் அதிகரிக்க வாய்ப்பு
ADDED : ஜூலை 17, 2011 06:50 AM
ராமநாதபுரம்:சிறுதொழிலுக்கான மானியம் 25 சதவீதமாக, அதிகரிக்கப்பட உள்ளது.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இயந்திரங்களின் மதிப்பில் 15 சதவீதம், மின் இணைப்புக்கு 36 மாதங்களுக்கு 20 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில், தொழில்துறையை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். தற்போது இதற்கான மானிய தொகை 25 சதவீதமாக அதிகரிக்கலாமா? என அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதன்படி 25 சதவீதம் அதிகரித்தால், தொழில் தொடங்குவோரும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.