ADDED : ஜூலை 28, 2011 03:06 AM
ஈரோடு: ஈரோட்டில் அனுமதி பெறாமல் இயங்கிய நான்கு சாயப்பட்டறைகளுக்கு,
'சீல்' வைக்கப்பட்டது.மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி இன்ஜினியர் குணசீலம்,
மின்வாரிய உதவி இன்ஜினியர் பழனிசாமி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள்,
ஈரோடு அருகே மாணிக்கம்பாளையம் வக்கீல் தோட்டத்தில் செயல்பட்டு வந்த
சாயப்பட்டறையில் சோதனை நடத்தினர்.மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல்
இயங்கியது தெரியவந்தது. அப்பட்டறைக்கு, 'சீல்' வைத்து மூடினர்.
நாராயணன் வலசு கொத்துக்காரர் தோட்டத்தில் செயல்பட்டு வந்த மூன்று
சாயப்பட்டறைகளும் அனுமதி பெறாமல் இயங்கி வந்தது தெரிந்தது. மூன்று
பட்டறைகளும், 'சீல்' வைக்கப்பட்டன.