ADDED : ஜூலை 11, 2011 10:45 PM
ஊட்டி : ஊட்டி நகர இந்து முன்னணி சார்பில், பயங்கரவாத எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு 17ம் தேதி ஊட்டி ஏ.டி.சி., திடலில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
கோவை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் முன்னிலை வகிக்கிறார். வரும் செப்.,மாதம் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைவராக பாலகிருஷ்ணன், துணை தலைவர்களாக ஆனந்தகுமார், விஜயகுமார், கோபால், செயலாளர்களாக கிருஷ்ணமூர்த்தி, ஜெகன், சண்முகம், பொருளாளர் கார்த்திக், துணை பொருளாளராக ராஜேந்திரன், விழா ஒருங்கிணைப்பாளர் மஞ்சுநாத், விழா ஆலோசகர்கள் ஸ்ரீதர், பாலமுருகன், லோகநாதன், ஆனந்தகுமார், தனலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.