/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மணல் திருடிய 3 லாரிகள் பறிமுதல்: மூவர் கைதுமணல் திருடிய 3 லாரிகள் பறிமுதல்: மூவர் கைது
மணல் திருடிய 3 லாரிகள் பறிமுதல்: மூவர் கைது
மணல் திருடிய 3 லாரிகள் பறிமுதல்: மூவர் கைது
மணல் திருடிய 3 லாரிகள் பறிமுதல்: மூவர் கைது
ADDED : ஆக 01, 2011 01:50 AM
திருவள்ளூர் : அரசு அனுமதியின்றி, லாரிகளில் மணல் திருடிச் சென்ற மூவரை கைது செய்த போலீசார், மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த, பெத்திகுப்பம் வழியாக, லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, இன்ஸ்பெக்டர் அசோக் மேத்தா மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு, திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக மணல் கடத்தி வந்த மூன்று லாரிகளை பறிமுதல் செய்தனர்.
அதன் டிரைவர்களான பெத்திகுப்பம் ரகு,31, சிந்தலகுப்பம் ரமேஷ்,30 மற்றும் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நகர் சீனிவாசன்,27 ஆகிய மூவரையும் கைது செய்தனர். லாரி உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.