ADDED : ஜூலை 27, 2011 02:25 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே பாளையம் கூட்டக்காரன்பட்டியை சேர்ந்தவர் முத்தல் நாயக்கர்.
இவர் கூறிய ஜோதிடம் பலிக்கவில்லை என்பதால், அரவக்குறிச்சியை சேர்ந்த பழனிச்சாமி, குஜிலியம்பாறை பெருமாள், கரூர் மனவாடி துரைச்சாமி ஆகியோர் கடந்த 2008 ல், அவரை கொன்று, சிறுமலை அடிவாரத்தில் வீசியதாக, போலீசார் வழக்கு பதிந்தனர். விரைவு கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இதில் ஆலமரத்துப்பட்டி வி.ஏ.ஓ., பெரியசாமி சாட்சியமளிக்கவில்லை. அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி முருகாம்பாள் உத்தரவிட்டார்.