/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாவட்ட கூடைப்பந்து போட்டி அல்வேர்னியா, ராஜலட்சுமி சாம்பியன்மாவட்ட கூடைப்பந்து போட்டி அல்வேர்னியா, ராஜலட்சுமி சாம்பியன்
மாவட்ட கூடைப்பந்து போட்டி அல்வேர்னியா, ராஜலட்சுமி சாம்பியன்
மாவட்ட கூடைப்பந்து போட்டி அல்வேர்னியா, ராஜலட்சுமி சாம்பியன்
மாவட்ட கூடைப்பந்து போட்டி அல்வேர்னியா, ராஜலட்சுமி சாம்பியன்
ADDED : ஜூலை 26, 2011 09:25 PM
கோவை : மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில், அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாணவியர் பிரிவிலும், ராஜலட்சுமி மில்ஸ் மேல்நிலைப்பள்ளி, மாணவர் பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றன.
ஒய்.எம்.சி.ஏ., கூடைப்பந்து கிளப் சார்பில் வெங்கடகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து போட்டி ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்தது. இதில் 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்காகவும், 13 வயதுக்குட்பட்ட சிறுவருக்காகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர் பிரிவில் 12 அணிகளும், மாணவியர் பிரிவில் ஏழு அணிகளும், சிறுவர் பிரிவில் 12 அணிகளும் போட்டியில் பங்கேற்றன. இறுதி போட்டியில் 17 வயது ஜூனியர் மாணவர் பிரிவில் ராஜலட்சுமி மில்ஸ் மேல்நிலைப் பள்ளி முதலிடமும், சர்வஜன மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும் பெற்றது. மாணவியர் பிரிவில் அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடமும், எல்.ஜி.,மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. 13 வயதுக்குட்பட்ட சிறுவர் பிரிவில் 12 பள்ளி அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் மேப்ளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடமும், கதிரிமில்ஸ் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. சர்வதேச கூடைப்பந்து வீரரும், முன்னாள் கூடைப்பந்து சங்க துணை தலைவருமான ராமதாஸ் பரிசு வழங்கினார். ஒய்.எம்.சி.ஏ., கூடைப்பந்து கிளப் செயலாளர் சிரில் இருதயராஜ் வரவேற்றார்.