/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சுகாதார நிலையங்களில் தாய்ப்பால் வார விழாசுகாதார நிலையங்களில் தாய்ப்பால் வார விழா
சுகாதார நிலையங்களில் தாய்ப்பால் வார விழா
சுகாதார நிலையங்களில் தாய்ப்பால் வார விழா
சுகாதார நிலையங்களில் தாய்ப்பால் வார விழா
ADDED : ஆக 11, 2011 11:37 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டாரத்துக்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்பால் வார விழா நடந்தது.கிணத்துக்கடவு, சொக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், தாய்பால் வார விழா நடந்தது.
சுகாதார ஆய்வாளர் ராஜலட்சுமி வரவேற்றார். டாக்டர்கள் சித்ரா, பிரபா தலைமை வகித்தனர். மருத்துவ அலுவலர் சித்ரா, வட்டார விரிவாக்க கல்வியாளர் ஜோதிமணி ஆகியோர், ''தாய்பால் மட்டும் குழந்தைகளுக்கு கொடுப்பதால், 22 சதவீதம் பாதிப்புகளை தவிர்க்க முடியும். எட்டுப் புள்ளிகள் அறிவுக்கூர்மை அதிகரிக்கிறது. மேலும், எட்டு சதவீதம் வயிற்றுப்போக்கு, 13 சதவீதம் நிமோனியா காய்ச்சலை தடுக்க முடியும். தாய்பால் கொடுப்பதால், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய்களை தடுக்க முடியும். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கல்லீரல் சம்பந்தமான நோய்கள் வருவதை தடுக்க முடியும்,'' என பேசினர்.குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பூசிகள் குறித்து ராஜேஸ்வரி, கர்ப்ப கால பராமரிப்பு குறித்து சசிகலா விளக்கினர். விழா ஏற்பாடுகளை, சுகாதார ஆய்வாளர், வெண்ணிலா மேற்கொண்டனர். சொக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர் சக்திராஜ குரு தலைமையில் தாய்ப்பால் வார விழா நடந்தது.