Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கடல் அட்டைக்கு உலக அளவில் தடை : வனஉயிரின உதவி பாதுகாவலர் தகவல்

கடல் அட்டைக்கு உலக அளவில் தடை : வனஉயிரின உதவி பாதுகாவலர் தகவல்

கடல் அட்டைக்கு உலக அளவில் தடை : வனஉயிரின உதவி பாதுகாவலர் தகவல்

கடல் அட்டைக்கு உலக அளவில் தடை : வனஉயிரின உதவி பாதுகாவலர் தகவல்

ADDED : ஆக 11, 2011 01:00 AM


Google News

ராமநாதபுரம் : 'கடல் மாசுக்களை உண்டு வாழும், கடல் அட்டைக்கு உலக அளவில் தடை கொண்டுவர இந்தியா முயற்சி செய்து வருகிறது' என ராமநாதபுரம் உதவி வன பாதுகாவலர் ராஜேந்திரன் கூறினார்.

ராமநாதபுரத்தில் வனஉயிர்சார் குற்றங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை, தொடங்கி வைத்து, அவர் பேசியதாவது : 1986ல் தெற்காசியாவில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது, முதன் முதலில் ராமநாதபுரத்தில் தான் இந்த காப்பகம் தோற்றுவிக்கப்பட்டது. இவற்றில் கடல் அட்டை என்பது, மாசுக்களை உண்டு, கடலை சுத்தப்படுத்துபவை. இவற்றை பிடித்தால், கடலின் வளர்ச்சி குன்றி விடும். கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 2002-03ல் கடல் அட்டை தடுப்பு சட்டம் இந்தியாவில் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் இவற்றை பிடித்தால் குறைந்த பட்சம் மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. கடல் அட்டைகள் வெளிநாடுகளில் கிலோவுக்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. 200 கிராம் கடல் அட்டையை காயவைத்தால் 50 கிராம் மட்டுமே இருக்கும். ஜப்பான், கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கடல் அட்டையை 'சூப்' செய்து சாப்பிடுகின்றனர். யானை தந்தங்கள் கடத்துவதற்கு உலக அளவில் சட்டம் உள்ளது. அதே போல் கடல் வளத்தை காத்து வரும் கடல் அட்டைகளை, பிடிப்பதற்கு தடை விதிக்க உலக அளவில் சட்டம் கொண்டு வர இந்தியா முயற்சி செய்து வருகிறது. கடல் அட்டை பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 152 வழக்குகள் நிலுவையில் உள்ளது, என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us