/உள்ளூர் செய்திகள்/கடலூர்/போக்குவரத்துக்கு இடையூறான மின் கம்பங்கள் அகற்றம்போக்குவரத்துக்கு இடையூறான மின் கம்பங்கள் அகற்றம்
போக்குவரத்துக்கு இடையூறான மின் கம்பங்கள் அகற்றம்
போக்குவரத்துக்கு இடையூறான மின் கம்பங்கள் அகற்றம்
போக்குவரத்துக்கு இடையூறான மின் கம்பங்கள் அகற்றம்
ADDED : ஜூலை 26, 2011 11:13 PM
பண்ருட்டி : பண்ருட்டி ராஜாஜி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இரண்டு மின் கம்பங்கள் அகற்றப்பட்டன.
பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு சிக்னல் அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக இரண்டு மின் கம்பங்கள் இருந்தன. போக்குவரத்திற்கு வசதிக்காக போலீசார் ராஜாஜி சாலையில் உள்ள இரண்டு மின் கம்பங்களையும் அகற்ற நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் நெடுஞ்சாலைத் துறை தான் மின் கம்பங்களை அகற்ற வேண்டும் எனக் கூறி கமிஷனர் அருணாசலம் தட்டி கழித்து வந்தார். இதனையடுத்து எஸ்.பி.பகலவன், டி.எஸ்.பி.மணி ஆலோசனையின் பேரில் மின் கம்பங்களை அகற்ற அனைத்து போலீசார் சார்பில் 24 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணமாக செலுத்தப்பட்டது. இதனையடுத்து நேற்று காலை 6 மணி முதல் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பங்களை அகற்றும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் நகரில் காலை 10 மணி வரை போக்குவரத்து மாற்று வழிப்பாதையில் திருப்பி விடப்பட்டது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


