/உள்ளூர் செய்திகள்/சென்னை/குத்துச்சண்டை போட்டியில் சாதனை படைத்த சென்னை மாணவியர்குத்துச்சண்டை போட்டியில் சாதனை படைத்த சென்னை மாணவியர்
குத்துச்சண்டை போட்டியில் சாதனை படைத்த சென்னை மாணவியர்
குத்துச்சண்டை போட்டியில் சாதனை படைத்த சென்னை மாணவியர்
குத்துச்சண்டை போட்டியில் சாதனை படைத்த சென்னை மாணவியர்
ADDED : செப் 04, 2011 09:35 PM
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூன்று மாணவியர், தேசிய அளவிலான குத்துச்சண் டை போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து, தங்கப்பதக்கங்கள் மற்றும் சிறந்த வீராங்கனை பட்டங்களைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
'இந்தியன் பாக்சர் பெடரேஷன்' சார்பில், தேசிய அளவிலான சப்-ஜூனியர் குத்துச்சண்டை போட்டிகள் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகளை, 'தமிழ்நாடு பாக்சிங் அசோசியேஷன்' கோவையில் நடத்தி முடித்தது. இதில், சென்னையைச் சேர்ந்த மூன்று மாணவியர், முதல் மூன்று இடத்ததை பிடித்தது மட்டுமின்றி, ஒரு மாணவி, தேசிய அளவில் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு குத்துச்சண்டை பயிற்சியளித்த பயிற்சியாளர் சத்தீஸ்வரி கூறியதாவது: நான் எத்திராஜ் கல்லுரியில் பி.ஏ., பொருளாதாரம் இறுதி ஆண்டு படிக்கிறேன். குத்துச்சண்டையில் மாநில அளவில் பதக்கங்கள் பெற்றுள்ளேன். என்னிடம் பயிற்சிப்பெற்ற மாணவியரான என் தங்கை பிரியங்கா மற்றும் லாவண்யா, கலைவாணி ஆகியோர், தேசிய அளவிலான சப்-ஜூனியர் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து பதக்கம் வென்றுள்ளது பெருமையாக உள்ளது. இவர்களில், பிரியங்கா தேசிய அளவிலான சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச போட்டியிலும் பங்கேற்க தகுதி பெற்று, இந்தியாவிற்கு பெருமை சேர்க்க காத்திருக்கிறார். இவ்வாறு சத்தீஸ்வரி கூறினார். நாடு முழுவதும் இருந்து, 23 மாநிலங்களிலிருந்து, 300 பேர் பங்கேற்ற குத்துச்சண்டை போட்டிகளில், நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மூன்று சென்னை மாணவியர், தேசிய அளவில் சாதனைப்படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களைப் போன்ற மாணவியர் சாதனை படைக்க, 'தமிழ்நாடு பாக்சிங் அசோசியேஷன்' பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் தமிழக முதல்வர், இந்த மாணவியரின் வளர்ச்சிக்கு உதவினால், அவர்கள், சர்வதேச அளவில் சாதிக்கும் வீராங்கனைகளாக மாற வாய்ப்புள்ளது.


