/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.19 லட்சம் உதவித் தொகைநலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.19 லட்சம் உதவித் தொகை
நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.19 லட்சம் உதவித் தொகை
நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.19 லட்சம் உதவித் தொகை
நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.19 லட்சம் உதவித் தொகை
தூத்துக்குடி : கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு 19 லட்சம் ரூபாய் உதவித் தொகையை அமைச்சர்கள் சண்முகநாதன் மற்றும் செல்லப்பாண்டியன் வழங்கினர்.
அத்தகைய திட்டங்களில் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நலத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த 1994ம் ஆண்டு முதல் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தை ஏற்படுத்தினார். இதன் மூலம் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், இயற்கை மற்றும் விபத்து நிவாரணத் தொகை மற்றும் மகப்பேறு உதவித் தொகை, குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு அனைத்து திட்டங்களையும் முதல்வர் நிறைவேற்றி வருகிறார் என்றார். விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் பேசும்போது, விலையில்லா அரிசி, வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை மற்றும் வறுமையில் வாடுபவர்கள் வேலை செய்து விட்டு வீட்டிற்கு வந்து கஷ்டப்படக்கூடாது என்பதற்காக மிக்ஸி, கிரைண்டர், பேன் போன்ற பல நல்ல திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளார். 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்திஉள்ளார். தொழிலாளர்களுக்கு முதல்முறையாக கண் கண்ணாடி வழங்கும் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்துள்ளார் என்றார். தொழிலாளர் இணை ஆணையர் சுந்தரராஜன் நன்றி கூறினார். விழாவில் டி.ஆர்.ஓ.,அமிர்தஜோதி, மாவட்ட பஞ்., தலைவர் சின்னத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.