ADDED : ஜூலை 23, 2011 10:01 PM
தொண்டி : தொண்டி, எஸ்.பி.பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம் போன்ற போலீஸ் ஸ்டேசன்களில் மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஜெலட்டின், பீஸ்வயர், டெட்டனேட்டர்கள் பாதுகாக்கபட்டு வந்தன.
இவைகளை அழிக்க முடிவு செய்ததால் மதுரையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வந்தனர். நேற்று முன்தினம் தொண்டி அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பாசிபட்டினம் கடற்கரை பகுதியில் 500க்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் அழிக்கப்பட்டன.


