ADDED : ஜூலை 11, 2011 09:45 PM
சூலூர் : ஆர்.வி.எஸ்., இன்ஜி., கல்லூரியில் எலக்ட் ரானிக்ஸ் மற்றும்
கம்யூனிக்கேஷன் துறை சார்பில் மாணவர் கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது.
துறைத்தலைவர் ரங்கநாதன் வரவேற்றார். மகேந்திரா பொறியியல் கல்லூரியின்
இயக்குனர் மால்முருகன் துவக்கி வைத்து பேசுகையில், ''நானோ டெக்னாலஜி
மற்றும் 3 ஜி அலைக் கற்றை வசதி எதிர்கால தலைமுறைக்கு பயனுள் ளது; புதிய
கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் ஈடுபடவேண்டும்,'' என்றார். கல்லூரி இயக்குனர்
ராபின்சன், டீன் நடராஜன் பேசினர். பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக
பங்கேற்றனர்.