/உள்ளூர் செய்திகள்/சேலம்/சமச்சீர் கல்வி போராட்டம் தி.மு.க.,வினர் புறக்கணிப்புசமச்சீர் கல்வி போராட்டம் தி.மு.க.,வினர் புறக்கணிப்பு
சமச்சீர் கல்வி போராட்டம் தி.மு.க.,வினர் புறக்கணிப்பு
சமச்சீர் கல்வி போராட்டம் தி.மு.க.,வினர் புறக்கணிப்பு
சமச்சீர் கல்வி போராட்டம் தி.மு.க.,வினர் புறக்கணிப்பு
ADDED : ஜூலை 30, 2011 01:03 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி பகுதியில், தி.மு.க., தலைமை அறிவித்த போராட்டத்தை கட்சியினர் புறக்கணித்ததால், பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன.
சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி, வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்த வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார். வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்துக்கு தனியார் பள்ளிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வகுப்புகளை புறக்கணிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை உயர் அதிகாரிகள் அறிவித்தனர்.
பனமரத்துப்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, துவக்கப்பள்ளிகள் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர். போராட்டம் நடத்த தி.மு.க.,வினரும் முன்வரவில்லை. அதனால், அனைத்து அரசு பள்ளிகளும் வழக்கம்போல் நடந்தன.