/உள்ளூர் செய்திகள்/கடலூர்/போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்
போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்
போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்
போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்
ADDED : செப் 05, 2011 11:49 PM
விருத்தாசலம்: மங்கலம்பேட்டையில் விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி விருத்தாசலம், மங்கலம்பேட்டை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டன. விருத்தாசலத்தில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. மங்கலம்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த 36 விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஓட்ட பிள்ளையார் கோவிலில் முத்துகுமார் எம்.எல்.ஏ., ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. எஸ்.பி., பகலவன் தலைமையில் ஏ.டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன், டி.எஸ்.பி., அறிவழகன் உள்ளிட்ட 250 போலீசார், வருவாய் துறையினர், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அனைத்து சிலைகளும் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது.