/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலத்தில் செல்போன் திருடிய 2 பேர் கைதுகுற்றாலத்தில் செல்போன் திருடிய 2 பேர் கைது
குற்றாலத்தில் செல்போன் திருடிய 2 பேர் கைது
குற்றாலத்தில் செல்போன் திருடிய 2 பேர் கைது
குற்றாலத்தில் செல்போன் திருடிய 2 பேர் கைது
ADDED : ஆக 01, 2011 02:06 AM
குற்றாலம் : குற்றாலத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார்
கைது செய்தனர்.குற்றாலத்தில் சீசன் துவங்கிய நாளிலிருந்து இன்று வரை
சுற்றுலா வரும் பயணிகளிடம் செல்போன் திருட்டு போவதாக குற்றாலம்
போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்து கொண்டிருந்தது.
இதன் அடிப்படையில்
சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அருவிக்கரையில் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில்
அவ்வழியாக வந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது மதுரை அண்ணாநகரை
சேர்ந்த கிருஷ்ணன் மகன் கணேசன் (25), திருச்சுழி உடைசேர்வைகாரன்பட்டி
கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (24) என்று தெரியவந்தது. விசாரணையில்
இவர்கள் குற்றால அருவிக்கரையில் செல்போன் திருடியதை ஒப்புக்
கொண்டனர்.இவர்களிடமிருந்து சுமார் 9 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து
இருவரையும் கைது செய்து செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.