Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/முழுமையான லோக்பால் மசோதா கோரி ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம்

முழுமையான லோக்பால் மசோதா கோரி ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம்

முழுமையான லோக்பால் மசோதா கோரி ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம்

முழுமையான லோக்பால் மசோதா கோரி ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம்

ADDED : ஆக 17, 2011 02:30 AM


Google News

தூத்துக்குடி : முழுமையான லோக்பால் மசோதாவை கொண்டு வராத மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடியில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வகை செய்யும் லோக்பால் மசோதாவை முழுமையாக கொண்டு வராத மத்திய அரசை கண்டித்தும், இதற்காக போராடி வரும் அன்னாஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்தும் தூத்துக்குடியில் ராஜாஜி பூங்கா முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. தூத்துக்குடி மாநகர ஊழல் எதிர்ப்பு இயக்கம், கயத்தாறு ஊழல் எதிர்ப்பு மக்கள் பேரியக்கம், லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கம், 5வது தூண், மனித உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கம், மக்கள் சக்தி இயக்கம் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் சார்பில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஊழல் எதிர்ப்பு மக்கள் பேரியக்கத்தின் மாநிலத் தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நயினார் குலசேகரன், மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் கணேசன், ஊழல் எதிர்ப்பு இயக்க சட்ட ஆலோசகர் சொக்கலிங்கம், ஊழல் எதிர்ப்பு சங்க உதவித் தலைவர் வெங்கடாசலபெருமாள், இந்திய செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த டாக்டர் வசீகரன், வீராங்கனை அமைப்பினை சேர்ந்த பாத்திமாபாபு, 5வது தூண் மாவட்ட பொறுப்பாளர் ஆதிநாராயணன், மாநில பொறுப்பாளர் ஆழ்வார், பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரம்மநாயகம், மனித உரிமை கழக மாவட்ட அமைப்பாளர் அதிசயகுமார், ஊழல் எதிர்ப்பு மக்கள் பேரியக்க செயலாளர் கணபதி, முன்னாள் எம்.எல்.ஏ.,சாதுசெல்வராஜ், சிபிஎம்., மாநிலக்குழு உறுப்பினர் சங்கரசுப்பு, மத்திய வியாபாரிகள் சங்க செயலாளர் நடராஜன், முன்னாள் பொருளாளர் ரத்தினபாண்டி, மனித உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்க மாநிலத் தலைவர் திருச்செல்வம் உட்பட பலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அன்னாஹசாரே கைதை கண்டித்து தூத்துக்குடியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்: அன்னாஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். அன்னாஹசாரே கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று தூத்துக்குடியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வக்கீல்கள் செல்வம் கிறிஸ்டோபர், மந்திரமூர்த்தி, தவசி, ரமேஷ்குமார், பாரதி, சரவணன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். மத்திய அரசுக்கு எதிராகவும், அன்னாஹசாரேவுக்கு ஆதரவாகவும் வக்கீல்கள் கோஷங்களை எழுப்பினர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us