ADDED : ஜூலை 25, 2011 01:54 AM
அன்னூர் : மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி மூக்கனூரில் நடக்கிறது.நேதாஜி கைப்பந்து குழு சார்பில், மாவட்ட அளவிலான அறுவர் கைப்பந்து போட்டி ஆக., 2 மற்றும் 3 ம் தேதிகளில் மூக்கனூரில் நடக்கிறது.
போட்டி பகல் மற்றும் இரவு நேரத்தில் நடக்கிறது. அன்னூர், சிறுமுகை, மேட்டுப்பாளையம், சோமனூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து அணிகள் பங்கேற்கின்றன. முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை நேதாஜி கைப்பந்து குழு மற்றும் எஸ்.ஆர்.சி., மன்றத்தினர் செய்து வருகின்றனர்.