தி.மு.க., நிர்வாகி சிறையில் அடைப்பு
தி.மு.க., நிர்வாகி சிறையில் அடைப்பு
தி.மு.க., நிர்வாகி சிறையில் அடைப்பு
UPDATED : ஆக 20, 2011 07:38 PM
ADDED : ஆக 20, 2011 07:16 PM
மதுரை:மதுரையை சேர்ந்த மோகன்தாஸ்காந்தி, குமார் கொடுத்த புகார்படி, தி.மு.க., மூன்றாம் பகுதி செயலாளர் ஒச்சுபாலு மீது மிரட்டல், மோசடி வழக்குகளை கரிமேடு போலீசார் பதிவு செய்தனர்.
கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட ஒச்சுபாலுவை, ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நேற்று மாஜிஸ்திரேட் கோர்ட் அனுமதித்தது. விசாரணை முடிந்து மாலை 4.30 மணிக்கு ஒச்சுபாலுவை ஆஜர்படுத்த வேண்டும். ஆனால், போலீசார் பகல் 12 மணிக்கு ஆஜர்படுத்தினர். விசாரணையை ஆக.,25க்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட் கதிரவன் (பொறுப்பு) உத்தரவிட்டார். ஒச்சுபாலு கடலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.