/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தேர்தல் பயிற்சி வகுப்புக்கு 25 சதவீதம் பேர் "ஆப்சென்ட்'தேர்தல் பயிற்சி வகுப்புக்கு 25 சதவீதம் பேர் "ஆப்சென்ட்'
தேர்தல் பயிற்சி வகுப்புக்கு 25 சதவீதம் பேர் "ஆப்சென்ட்'
தேர்தல் பயிற்சி வகுப்புக்கு 25 சதவீதம் பேர் "ஆப்சென்ட்'
தேர்தல் பயிற்சி வகுப்புக்கு 25 சதவீதம் பேர் "ஆப்சென்ட்'
ADDED : அக் 02, 2011 09:08 PM
அன்னூர் : அன்னூரில் நடந்த வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்புக்கு 25 சதவீதம் பேர் வரவில்லை.
அன்னூர் ஒன்றியத்தில் 137 வாக்குச்சாவடிகளில், அக்., 19ல் தேர்தல் நடைபெற உள்ளது.
ஒரு வார்டு உள்ள வாக்குச்சாவடிகளில் ஏழு பேர், இரு வார்டு உள்ளவற்றில் எட்டு பேர் என மொத்தம் 1,017 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் கட்ட பயிற்சி வகுப்பு அன்னூரில் பளஞ்சிக திருமண மண்டபத்தில் நடந்தது. அன்னூர் துணை பி.டி.ஓ., ரவிச்சந்திரன் வரவேற்றார். வட்டார தேர்தல் அலுவலர் அருள்நாதன் ஜோசப் பேசிய தாவது: வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தலுக்கு முந்தையநாள் பகல் 12.00 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும். கடிகாரத்தை சரியான நேரத்திற்கு வைத்துக் கொள்ள வேண்டும். தேர்தல் நாளன்று காலை 6.00 மணிக்கு பணியில் இருக்க வேண்டும். ஓட்டுப்பெட்டியை 15 நிமிடம் முன்னதாகவே தயார் செய்து வைக்க வேண்டும்.
சரியாக 7.00 மணிக்கு ஓட்டுப்பதிவை துவக்கி விட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் உள்ள பெண்கள் வந்தால், அவர்கள் முதலில் ஓட்டுப்போட அனுமதிக்கலாம். ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர்தான் அனுமதி. மாற்றாக ஒன்று அல்லது இருவரை நியமிக்கலாம். ஓட்டுச்சாவடிக்குள் ஒரே சமயத்தில் ஒருவரை மட்டும் அனுமதிக்க வேண்டும்.
வேட்பாளரின் முகவர் தாமதமாக வந்தாலும் உள்ளே அனுமதிக்கலாம். வாக்காளர்கள் ஒட்டளிப்பதை போட்டோ எடுக்க அனுமதிக்கக்கூடாது. மாலை 5.00 மணிக்கு வரிசையில் நிற்பவர்களுக்கு கையெழுத்து போட்டு டோக்கன் தர வேண்டும். ஓட்டுப்பதிவு தினத்தன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை தங்களது டைரியில் கண்டிப்பாக எழுதி, பொறுப்பு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அருள்நாதன் ஜோசப் பேசினார்.
'பயிற்சி வகுப்பில் பங்கேற்க 1,017 பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. 750 பேர் மட்டுமே பங்கேற்றனர். 25 சதவீதம் பேர் வகுப்புக்கு வரவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்படும்' என்று ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயிற்சி வகுப்புக்கு வந்த ஆசிரியர்கள் கூறுகையில், ''பொள் ளாச்சி மற்றும் வால்பாறையில் பணிபுரிபவர்களுக்கு அன்னூரில் பணிபுரிய உத்தரவு கொடுத்துள்ளனர். ''இதனால் மூன்று முறை பயிற்சி வகுப்புக்கும், தேர்தல் நாளன்றும் 100 கி.மீ.,தூரத்திற்கு மேல் பயணம் செய்து வர வேண்டும். அருகில் உள்ள ஒன்றியங்களில் பணி வழங்கியிருக்கலாம்,'' என்றனர்.


