/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மிரட்டல் விடுத்த 5 பேர் மீது வழக்குமிரட்டல் விடுத்த 5 பேர் மீது வழக்கு
மிரட்டல் விடுத்த 5 பேர் மீது வழக்கு
மிரட்டல் விடுத்த 5 பேர் மீது வழக்கு
மிரட்டல் விடுத்த 5 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 14, 2011 10:20 PM
திண்டுக்கல் : திண்டுக்கல் தலைமை போஸ்ட் ஆபீஸ் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ண(55) னுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தாடிக்கொம்பு மல்வார்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் பணிபுரியும் ராமசாமி. இவர், மணிஆர்டர் மூலம் வந்த முதியோர் உதவித்தொகையை தராமல் முறைகேடு செய்ததாக, அதே பகுதியை சேர்ந்த பாண்டி, மீனாட்சி, பாலச்சந்திரன், மைக்கேல் சகாயராஜ், கணேசன் ஆகியோர், கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனிடம் புகார் செய்திருந்தனர். விசாரித்து ராமசாமி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தனர். வடக்கு போலீசார் ஐந்து பேர் மீது வழக்குபதிந்துள்ளனர்.