/உள்ளூர் செய்திகள்/மதுரை/சுகாதார சான்று வழங்க ரூ.1300 லஞ்சம் துணை இயக்குனரின் உதவியாளர் கைதுசுகாதார சான்று வழங்க ரூ.1300 லஞ்சம் துணை இயக்குனரின் உதவியாளர் கைது
சுகாதார சான்று வழங்க ரூ.1300 லஞ்சம் துணை இயக்குனரின் உதவியாளர் கைது
சுகாதார சான்று வழங்க ரூ.1300 லஞ்சம் துணை இயக்குனரின் உதவியாளர் கைது
சுகாதார சான்று வழங்க ரூ.1300 லஞ்சம் துணை இயக்குனரின் உதவியாளர் கைது
ADDED : செப் 24, 2011 02:09 AM
மதுரை : மதுரையில் பள்ளிக்கு சுகாதார சான்று வழங்க ரூ.1300 லஞ்சம் பெற்ற சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மச்சக்காளையை,57, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். வண்டியூரைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி, 67. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், எஸ்.எம்.கே. நர்சரி பள்ளி நடத்துகிறார். இந்த கல்வி ஆண்டிற்கான சுகாதார சான்று கேட்டு, விஸ்வநாதபுரம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் செல்லப்பாண்டி விண்ணப்பித்தார். கள்ளந்திரி சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆய்வுசெய்து, சான்று வழங்க பரிந்துரைத்தார். செல்லப்பாண்டியை அணுகிய, துணை இயக்குனரின் நேர்முக
உதவியாளர் மச்சக்காளை, ''ரூ.1,300 லஞ்சம் தந்தால்தான் சான்று தருவேன்,'' என்றார். இதைதொடர்ந்து, மச்சக்காளையும், பாலசுப்பிரமணியமும் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கலாவதியிடம் செல்லப்பாண்டி புகார் செய்தார். நேற்று மதியம், துணை இயக்குனர் அலுவலகத்தில் செல்லப்பாண்டியிடமிருந்து மச்சக்காளை ரூ.1300 லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார். போலீசார் கூறுகையில், ''பாலசுப்பிரமணியத்திற்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்,'' என்றனர்.