/உள்ளூர் செய்திகள்/தேனி/தேனியில் நம்பர் 1 வார்டு 15 ஆண்டாக தொடர் சாதனை : சுயே., வேட்பாளர் ஸ்ரீதரன்தேனியில் நம்பர் 1 வார்டு 15 ஆண்டாக தொடர் சாதனை : சுயே., வேட்பாளர் ஸ்ரீதரன்
தேனியில் நம்பர் 1 வார்டு 15 ஆண்டாக தொடர் சாதனை : சுயே., வேட்பாளர் ஸ்ரீதரன்
தேனியில் நம்பர் 1 வார்டு 15 ஆண்டாக தொடர் சாதனை : சுயே., வேட்பாளர் ஸ்ரீதரன்
தேனியில் நம்பர் 1 வார்டு 15 ஆண்டாக தொடர் சாதனை : சுயே., வேட்பாளர் ஸ்ரீதரன்
ADDED : செப் 30, 2011 01:30 AM
தேனி : தேனி 23வது வார்டு வேட்பாளர் ஸ்ரீதரன் பொதுமக்களின் வேண்டுகோள் காரணமாக மீண்டும் 4வது முறையாக போட்டியிடுகிறார்.
தேனி என்.ஆர்.டி., நகருக்கு வந்து செல்லும் வெளியூர்க்காரர்கள் இப்படி ஒரு அழகான, அமைதியான, சுத்தமான இடம் நம் ஊரில் இல்லையே என வருத்தப்படுவார்கள். அந்தளவுக்கு என்.ஆர்.டி., நகர் மரங்கள் சூழ்ந்த சுத்தமான அமைதிப்பகுதியாக விளங்குகிறது. இங்கு தொடர்ந்து சுயேட்சையாக மூன்று முறை வெற்றி பெற்று 15 ஆண்டாக கவுன்சிலராக இருக்கும் ஸ்ரீதரனும் காரணம். குடிநீர் சப்ளை, தெருவிளக்கு எரிவது, குப்பை அகற்றுவது, சாக்கடை சுத்தம் செய்வது என எல்லாவற்றிலும் நம்பர் ஒன் வார்டாக என்.ஆர்.டி., நகர் விளங்குகிறது. 4வது முறையாக சுயேட்சையாக போட்டியிடும் ஸ்ரீதரன் கூறுகையில், 'தேனியில் பாதாள சாக்கடை பணிகளும், புதிய குடிநீர் திட்ட பணிகளும் நடக்கின்றன. இந்த பணிகளை விரைவுபடுத்தி என் வார்டில் முறைப்படுத்துவது எனது முக்கிய கடமை. பாதாள சாக்கடை பணிகள் முடிந்ததும் அனைத்து ரோடுகளையும் நல்ல முறையில் சீரமைக்க வேண்டும். இங்குள்ள பூங்காவினை சீரமைத்து சிறுவர்கள் விளையாட்டு மைதானமாகவும், முதியோர்கள் ஓய்வு எடுக்கும் அமைதியான இடமாகவும் மாற்ற முயற்சிப் பேன்' என்றார்.