/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிப்பதற்கு அக்.1 ல் வாக்காளர் பட்டியல் வெளியீடுஉள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிப்பதற்கு அக்.1 ல் வாக்காளர் பட்டியல் வெளியீடு
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிப்பதற்கு அக்.1 ல் வாக்காளர் பட்டியல் வெளியீடு
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிப்பதற்கு அக்.1 ல் வாக்காளர் பட்டியல் வெளியீடு
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிப்பதற்கு அக்.1 ல் வாக்காளர் பட்டியல் வெளியீடு
ADDED : ஆக 11, 2011 10:56 PM
விருதுநகர் : உள்ளாட்சி தேர்தல் ஓட்டளிப்பதற்கு வசதியாக, தகுதியுள்ளவர்களை பட்டியலில் சேர்க்கவும், இதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை அக்.,1 ல் வெளியிடவும் தமிழக தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், இதற்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. உள்ளாட்சித்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை தகுதியுள்ள வாக்காளர்களை சேர்க்க, தமிழக தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, புதிய வாக்காளர் சேர்க்கை குறித்து கால அட்டவனையை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதில், ஆக., 25 க்குள் அனைத்து ஓட்டுச்சாவடிக்கும் அலுவலர்களை நியமித்து, ஆக., 24 முதல் 26 வரை சென்னையில் மாஸ்டர் பயிற்சியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கவும், வாக்காளர்கள் பட்டியலை சரி பார்த்து தொலைபேசி, மொபைல் எண்ணுடன் வழங்கவும், இதற்கான விண்ணப்பங்களை அச்சிட்டு ஆக., 30 க்குள் வழங்கவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும், செப்., 1 முதல் 5 க்குள் மாஸ்டர் பயிற்சியாளர்களால் அந்தந்த மாவட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கவும், சட்டசபை தேர்தலின்போது பூத் சிலிப்புகள் வாங்காத வாக்காளர்கள் குறித்து செப்., 5 முதல் 13 வரை ஆய்வு செய்யவும், பட்டியலில் நீக்கம் செய்யும் வாக்காளர்கள் குறித்து செப்., 15 க்குள் நோட்டீஸ் வழங்கவும்,செப்., 28 ல் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்குதல் பணிகளை முடிப்பதோடு, அக்., 1 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.