/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஆட்டோ ஸ்டாண்ட் மாறுதலுக்கு எதிர்ப்பு; டிரைவர்கள் கூடியதால் பரபரப்புஆட்டோ ஸ்டாண்ட் மாறுதலுக்கு எதிர்ப்பு; டிரைவர்கள் கூடியதால் பரபரப்பு
ஆட்டோ ஸ்டாண்ட் மாறுதலுக்கு எதிர்ப்பு; டிரைவர்கள் கூடியதால் பரபரப்பு
ஆட்டோ ஸ்டாண்ட் மாறுதலுக்கு எதிர்ப்பு; டிரைவர்கள் கூடியதால் பரபரப்பு
ஆட்டோ ஸ்டாண்ட் மாறுதலுக்கு எதிர்ப்பு; டிரைவர்கள் கூடியதால் பரபரப்பு
கூடலூர் : 'கூடலூர் புதிய பஸ் ஸ்டாண்டில் 6 ஆட்டோக்களை மட்டும் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்,' என்ற உத்தரவுக்கு ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கூடலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே மைசூர் சாலையில் ஒரு புறம் ஆட்டோ, மறு புறம் ஜீப் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.
இந்த நடவடிக்கையினால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும்; 40 ஆட்டோக்கள் நிறுத்த அனுமதிக்க வேண்டும்' என வலியுறுத்தினர். 'இது குறித்து பின்னர் பேசி முடிவு செய்யலாம்,' என போலீசார் தெரிவித்தனர். 'பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வில்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம்,' என ஆட்டோ ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.இது குறித்து கூடலூர் டி.எஸ்.பி. லட்சுமணன் கூறுகையில், ''போக்கு வரத்தை சீரமைக்கவே இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்; மக்கள் தேவைக்கு ஏற்ப கூடலூர் - தொரப்பள்ளி இடையே அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் இயக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்,'' என தெரிவித்தார்.