எம்.ஏ.சி., அறக்கட்டளை விருது அறிவிப்பு
எம்.ஏ.சி., அறக்கட்டளை விருது அறிவிப்பு
எம்.ஏ.சி., அறக்கட்டளை விருது அறிவிப்பு
ADDED : செப் 25, 2011 06:20 AM
சென்னை:கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவருக்கான விருதுகளை, எம்.ஏ.சி., அறக்கட்டளை அறிவித்துள்ளது.சிறந்த தமிழறிஞருக்கான, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது, டாக்டர்.எஸ்.வி., சண்முகத்திற்கும், கலைத்துறையில் சிறந்து விளங்கியோருக்கான எம்.ஏ., சிதம்பரம் செட்டியார் விருது, கவிஞர் வாலிக்கும், இளம் தொழில்முனைவோருக்கான ஏ.சி., முத்தையா விருது, தொழிலதிபர் எம்.பி.ராமசந்திரனுக்கும் வழங்கப்படுகிறது.சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில், வரும் 12ம் தேதி, டாக்டர் எம்.ஏ.சிதம்பரத்தின் 93வது பிறந்த நாளன்று, விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
நிகழ்ச்சியில், ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும், நினைவுப் பரிசும் விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படும்.