/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/விலை சரிவால் திராட்சை விவசாயிகள் விரக்தி : மாற்று வழி தெரியாமல் பரிதவிப்புவிலை சரிவால் திராட்சை விவசாயிகள் விரக்தி : மாற்று வழி தெரியாமல் பரிதவிப்பு
விலை சரிவால் திராட்சை விவசாயிகள் விரக்தி : மாற்று வழி தெரியாமல் பரிதவிப்பு
விலை சரிவால் திராட்சை விவசாயிகள் விரக்தி : மாற்று வழி தெரியாமல் பரிதவிப்பு
விலை சரிவால் திராட்சை விவசாயிகள் விரக்தி : மாற்று வழி தெரியாமல் பரிதவிப்பு
சின்னாளபட்டி : சின்னாளபட்டி பகுதியில் விலை சரிந்ததால், திராட்சை விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
திராட்சை கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை விற்றால் மட்டுமே, கணிசமான தொகை விவசாயிக்கு கிடைக்கும். மாறாக விலை சரிந்தால் நஷ்டம் ஏற்படும். தற்போது கிலோ 15 ரூபாய் விலை போவதால் திராட்சை சாகுபடி செய்த விவசாயிகள் 'ச்சீ..ச்சீ' இந்த பழம் புளிக்கும்' என, சலித்து போய் திராட்சை விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எம்.காம்., எம்.பி.ஏ., விற்பனை மேலாண்மையில் முதுநிலை பட்டயம் என, ஏராளமாக படித்து விவசாயம் பார்க்கும் இளைஞர் சுப்பிரமணி (சாமியார்பட்டி) கூறியது: விவசாயத்தின் மீது விருப்பம் கொண்டு, வேறு வேலைக்கு செல்ல முயற்சிக்கவில்லை. தற்போது ஆட்கள் பற்றாக்குறை, பராமரிப்பு செலவு அதிகரிப்பு, விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்காதது போன்றவற்றால் விவசாயம் மிகவும் கடினமானதாகவும், நஷ்டம் தரக்கூடியதாகவும் மாறிவிட்டது. தற்போது திராட்சை விலை சரிவால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர், என்றார்.