/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கச்சிராயபாளையம் ஆலையில் அக்., 19ம் தேதி அரவை துவக்கம்கச்சிராயபாளையம் ஆலையில் அக்., 19ம் தேதி அரவை துவக்கம்
கச்சிராயபாளையம் ஆலையில் அக்., 19ம் தேதி அரவை துவக்கம்
கச்சிராயபாளையம் ஆலையில் அக்., 19ம் தேதி அரவை துவக்கம்
கச்சிராயபாளையம் ஆலையில் அக்., 19ம் தேதி அரவை துவக்கம்
ADDED : ஆக 19, 2011 03:42 AM
கள்ளக்குறிச்சி:கச்சிராயபாளையத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அக்டோபர் 19ம் தேதி கரும்பு அரவை துவக்கப்படுகிறது.கச்சிராயபாளையத்தில் கள்ளக்குறிச்சி (எண்-2) கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் வரும் 2011-12ம் ஆண்டிற்கான கரும்பு அரவை அக்டோபர் 19ம் தேதி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்தாண்டைப்போல் ஆலைக்கு கரும்பு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆட்சியர் சிவமலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


