/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ராஜஸ்தான் கைவினை பொருட்கள் கண்காட்சி விற்பனை துவக்கம்ராஜஸ்தான் கைவினை பொருட்கள் கண்காட்சி விற்பனை துவக்கம்
ராஜஸ்தான் கைவினை பொருட்கள் கண்காட்சி விற்பனை துவக்கம்
ராஜஸ்தான் கைவினை பொருட்கள் கண்காட்சி விற்பனை துவக்கம்
ராஜஸ்தான் கைவினை பொருட்கள் கண்காட்சி விற்பனை துவக்கம்
ADDED : செப் 03, 2011 12:39 AM
ஈரோடு: ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் ராஜஸ்தான் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நேற்று துவங்கியது.
அறநிலையத்துறை உதவி ஆணையர் தனபாலன் துவக்கி வைத்தார். பூம்புகார் மேலாளர் ஆறுமுகம் கூறியதாவது: கைவினைஞர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கிலும், அவர்களது கைவினை பொருட்களை சந்தைப்படுத்தும் வகையிலும், ராஜஸ்தான் கைவினைப் பொருட்கள் கண்காட்சி விற்பனை நேற்று துவங்கியது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ராஜஸ்தான் நகைகள், ரத்தின நகைகள், சிற்பங்கள், பூ ஜாடிகள், நகைப்பெட்டிகள், ஜெம்ஸ்டோன் பெயின்டிங், காட்டன் பெயின்டிங், சில்க் பெயின்டிங், மார்பிள் கற்களாலான கடிகாரங்கள், மார்பிள் பிளேட்டுகள், ஒயிட் மெட்டல் சிற்பங்கள், பூஜை பொருட்கள், பீங்கான், வெள்ளை மரத்தாலான ஸ்வாமி சிற்பங்கள் விற்பனைக்கு உள்ளன. அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இரண்டு லட்சம் ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.