/உள்ளூர் செய்திகள்/திருச்சி/சுதந்திரதின விழா பாதுகாப்பு உச்சக்கட்டம் : விமானம் அருகே பயணிகளிடம்இரண்டாம் கட்டமாக சோதனைசுதந்திரதின விழா பாதுகாப்பு உச்சக்கட்டம் : விமானம் அருகே பயணிகளிடம்இரண்டாம் கட்டமாக சோதனை
சுதந்திரதின விழா பாதுகாப்பு உச்சக்கட்டம் : விமானம் அருகே பயணிகளிடம்இரண்டாம் கட்டமாக சோதனை
சுதந்திரதின விழா பாதுகாப்பு உச்சக்கட்டம் : விமானம் அருகே பயணிகளிடம்இரண்டாம் கட்டமாக சோதனை
சுதந்திரதின விழா பாதுகாப்பு உச்சக்கட்டம் : விமானம் அருகே பயணிகளிடம்இரண்டாம் கட்டமாக சோதனை
ADDED : ஆக 07, 2011 01:59 AM
திருச்சி: சுதந்திரதினத்தையொட்டி தீவிரவாதிகளின் சதித்திட்டங்களை முறியடிக்கும் வகையில், விமானங்களில் நேற்று முதல் பயணிகளிடம் இரண்டாவது கட்ட சோதனைகளை நடத்த பாதுகாப்பு கமிட்டி முடிவு செய்துள்ளது.
சுதந்திர தின கொண்டாடட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என எச்சரிக்கையின் பேரில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. திருச்சி விமானநிலையத்தில் சுதந்திர தினவிழா பாதுகாப்பு குறித்து, விமான நிலைய பாதுகாப்பு கமிட்டியின் சிறப்பு ஆலோசனை கூட்டம் முன்தினம் நடந்தது. விமானநிலைய பாதுகாப்பு இயக்குனர் தர்மராஜா தலைமை வகித்தார். சி.ஐ.எஸ்.எஃப்., பாதுகாப்பு படை துணை கமாண்டட் அர்விந்த் சவுகான், விமான நிலைய இமிகிரேஷன் டி.எஸ்.பி., ஸ்ரீதரன், மத்திய, மாநில உளவு துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விமான நிலைய வளாக இரண்டு நுழைவுவாயில்களிலும் சி.ஐ.எஸ்.எஃப்., போலீஸாருடன் உள்ளூர் போலீஸாரும் இணைந்து பாதுகாப்பு மேற்கொள்வது, விமானநிலைய வளாகத்துக்குள் வரும் வாகனங்களை பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடத்துவது.பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனைக்கு பின் அனுமதிப்பது, பயணிகள் விமானம் ஏறுவதுக்கு முன் வரும் விமானம் அருகிலேயே நிறுத்தி இரண்டாம் கட்ட சோதனை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. சி.ஐ.எஸ்.எஃப்.,பின் அதிவிரைவு படை பிரிவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படை வீரர்கள் பயணிகள் ஒவ்வொருவரையும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நடைமுறைகள் அனைத்தும் நேற்று அதிகாலை 12 மணி முதல் அமலுக்கு வந்தது. விமானநிலையத்தில் 65 நவீன கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டும், இன்னும் செயல்படவில்லை. இவற்றை சுதந்திரதினப் பாதுகாப்பு சோதனைக்கு பயன்படும்படி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.