/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசி பகுதியில் இன்று விநாயகர் சதுர்த்தி விழாதென்காசி பகுதியில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா
தென்காசி பகுதியில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா
தென்காசி பகுதியில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா
தென்காசி பகுதியில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா
தென்காசி : தென்காசி பகுதியில் இன்று (1ம் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
தென்காசி தெற்குமாசி வீதி கற்பக விநாயகர் கோயிலில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. மாலையில் விநாயகருக்கு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் அலங்கார தீபாராதனை நடக்கிறது. ஹவுசிங் போர்டு காலனி குடிசை மாற்று வாரியம் பிரம்ம சக்தி இரட்டை விநாயகர் கோயிலில் காலையில் சிறப்பு கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனைகள், மதியம் அன்னதானம், இரவு சிறப்பு சதுர்த்தி பூஜை நடக்கிறது.
தென்காசி மேலசங்கரன்கோவில், தென்பழனியாண்டவர் கோயில், அணைக்கரை விநாயகர் கோயில், ஒப்பனை பிள்ளையார் கோயில், பூங்கொடி விநாயகர் கோயில், முடுக்கு விநாயகர் கோயில், செண்பக விநாயகர் கோயில், கூளக்கடை பஜார் சந்தி விநாயகர் கோயில், ரயில்வே ரோடு தர்ம விநாயகர் கோயில், தாலுகா அலுவலக வளாக விநாயகர் கோயில், கீழப்புலியூர் புலிக்குட்டி விநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடக்கிறது.
காசிவிசுவநாதர் கோயில் முன் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள், ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. நாளை (2ம் தேதி) மாலையில் இச்சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தென்காசி சிற்றாறு யானைப்பாலம் படித்துறையில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. குத்துக்கல்வலசை பசிதுஷ்டராய கண்ட விநாயகர் கோயிலில் மதியம் விநாயகருக்கு எண்ணெய் காப்பு சாத்தப்பட்டு நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடக்கிறது. நைவேத்தியம் படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
குற்றாலம் குற்றாலநாதர் கோயில் விநாயகர் சன்னதி, இலஞ்சி குமாரர் கோயில் விநாயகர் சன்னதி, வல்லம், காசிமேஜர்புரம், பிரானூர், கொட்டாகுளம், இலஞ்சி குன்னக்குடி, ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, புளியரை, கற்குடி, கேசவபுரம், கட்டளைக்குடியிருப்பு, பண்பொழி, விசுவநாதபுரம், பெரியபிள்ளைவலசை, தேன்பொத்தை, வடகரை, அச்சன்புதூர், இலத்தூர், நெடுவயல், சீவநல்லூர், கணக்கப்பிள்ளைவலசை, கொடிக்குறிச்சி, இடைகால், ஆய்க்குடி, சாம்பவர்வடகரை, சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, திருச்சிற்றம்பலம், மத்தளம்பாறை, புல்லுக்காட்டுவலசை, திரவியநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விநாயகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது.