Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஈ.சி.ஆர்., சாலையை ஆக்கிரமித்து மீன் விற்பனை

ஈ.சி.ஆர்., சாலையை ஆக்கிரமித்து மீன் விற்பனை

ஈ.சி.ஆர்., சாலையை ஆக்கிரமித்து மீன் விற்பனை

ஈ.சி.ஆர்., சாலையை ஆக்கிரமித்து மீன் விற்பனை

ADDED : ஜூலை 21, 2011 12:42 AM


Google News
கொட்டிவாக்கம்:கொட்டிவாக்கத்தில் ஈ.சி.ஆர்., சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள இருபதுக்கும் மேற்பட்ட மீன் கடைகளால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.சென்னை புறநகரின் பிரதான சாலைகளில் ஒன்றாக விளங்குகிறது கிழக்கு கடற்கரை சாலை.

ஏராளமான சுற்றுலாத் தலங்களை கொண்ட இச்சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படுவது வழக்கம். சென்னையின் முக்கியப்பகுதிகளில் இருந்து திருவான்மியூர் வழியாக கோவளம், மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி இயக்கப்படும் நூற்றுக் கணக்கான மாநகர பஸ்களும், சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் ஆயிரக்கணக்கான புறநகர் பஸ்களும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றன.திருவான்மியூர் தொடங்கி, ஈஞ்சம்பாக்கம் வரை அமைந்துள்ள ஏராளமான வணிக வளாகங்களின் ஆக்கிரமிப்புகளால், ஈ.சி.ஆர்., சாலை நாளுக்கு நாள் சுறுங்கிக் கொண்டே வருகிறது. இதில், கொட்டிவாக்கம் ஊராட்சி, அதிக பங்கு வகிக்கிறது.இப்பகுதியில், கடந்த சில வருடங்களாக அதே பகுதியை சேர்ந்த சிலர், ஈ.சி.ஆர்., சாலையின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்து இருபதுக்கும் மேற் பட்ட கடைகளை அமைத்து மீன்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அவ்வப்போது, விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.இதுகுறித்து வாகன ஓட்டிகள் சிலர் கூறுகையில், 'இப்பகுதியில் சாலையை ஆக்கிரமித்து மீன்கள் விற்பனை செய்யப்படுவதால், அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்துகின்றனர். இதனால், அவ்வழியே மற்ற வாகனங்கள் செல்ல முடிவதில்லை. இதனால், அடிக்கடி விபத்துக்களும் நிகழ்கின்றன. குறிப்பாக, ஞாயிற்றுக் கிழமைகளில் கூடுதலான கடைகள், சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்படுவதால் இப்பகுதியில் சாலையே, சந்தையாக காட்சியளிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.இதுகுறித்து, கொட்டிவாக்கம் ஊராட்சி துணைத் தலைவர் குப்பனிடம் கேட்டபோது, 'இப்பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஊராட்சிக்கு சொந்தமான வேறொரு இடத்தில் மீன் அங்காடியை மாற்றி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உதவியுடன் இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us