/உள்ளூர் செய்திகள்/கரூர்/அரசு பெண் ஊழியரை தாக்கிய கார் டிரைவர் கைதுஅரசு பெண் ஊழியரை தாக்கிய கார் டிரைவர் கைது
அரசு பெண் ஊழியரை தாக்கிய கார் டிரைவர் கைது
அரசு பெண் ஊழியரை தாக்கிய கார் டிரைவர் கைது
அரசு பெண் ஊழியரை தாக்கிய கார் டிரைவர் கைது
ADDED : ஜூலை 14, 2011 12:35 AM
குளித்தலை: குளித்தலை அருகே வேப்பங்குடியை சேர்ந்தவர் வெங்கடாசலம்.
இவர் ஹோட்ட தொழிலாளி. இவரது மனைவி தாமைரச்செல்வி (27). பஞ்சப்பட்டி அருகே உள்ள சுக்காம்பட்டியில் அங்கன்வாடி பள்ளியில் உதவியாளராக பணிபுரிகிறார். தாமரைச் செல்வி தினசரி வீட்டில் இருந்து சைக்கிளில் இரும்பூதிப்பட்டிக்கு வந்து பஸ் மூலம் சுக்காம்பட்டிக்கு சென்று வந்தார். கடந்த 8ம் தேதி மாலை தாமரைச் செல்வி சைக்கிளில் வீட்டுக்கு வரும்போது இரும்பூதிப்பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் மகன் சரவணன் (21) கார் டிரைவர். தாமரைச்செல்வியை தடுத்து நிறுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. சரவணன் தகராறு செய்தது குறித்து தாமரைச்செல்வி 12ம் தேதி அவரது வீட்டுக்கு சென்று சரவணனின் தாய், மனைவியிடம் தெரிவித்தார். அப்போது அங்கு இருந்த சரவணன் தாமரைசெல்வியை அடித்தும், ஜாதி பெயரை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தாமரைச்செல்வி குளித்தலை போலீஸில் புகார் செய்தார். குளித்தலை டி.எஸ்.பி., மனோகரன் அரசு ஊழியரை அடித்தும், ஜாதி பெயரை கூறி அவதூறாக பேசியதாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தார்.


