ADDED : ஆக 26, 2011 01:07 AM
கிருஷ்ணகிரி: அனைவருக்கும் கல்வி இயக்கம், பர்கூர் வட்டார வள மையம்
சார்பில், மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி
பர்கூரில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
தலைமையாசிரியர் அகமது பாட்ஷா கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். வட்டார
வள மைய மேற்பார்வையாளர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். பேரணியில் பெண்கள்
மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். பேரணி சிந்தகம்பள்ளி ரோடு,
ஜெகதேவி ரோடு, சின்னபர்கூர், பஸ் ஸ்டாண்டு, டெக்ஸ்டைல்ஸ் மார்க்கெட் வழியே
சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவிகள்,
மாற்றுதிறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி கோஷங்களை
எழுப்பினர். பேரணிக்கான ஏற்பாடுகளை சிறப்பாசிரியர் அருண்குமார், மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், ஆசிரியர் பயிற்றுனர்கள் கோவிந்தசாமி,
சுகுணா, உமாமகேஸ்வரி சிறப்பாசிரியர்கள் ஜெயசங்கரி, அமலா, விஜயன் மற்றும்
சமுதாயம் சார்ந்த மறுவாழ்வு பணியாளர்கள் செய்தனர்.