/உள்ளூர் செய்திகள்/தேனி/நெல்லி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மான்யம்நெல்லி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மான்யம்
நெல்லி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மான்யம்
நெல்லி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மான்யம்
நெல்லி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மான்யம்
ADDED : ஜூலை 25, 2011 10:25 PM
தேனி : நெல்லி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மான்யம் வழங்கப்படுகிறது என தோட்டக்கலை அலுவலர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: நெல்லி எல்லா வகை மண்ணிலும் வறட்சியை தாங்கி வளரும். பெரு நெல்லி பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கவும், சோப்பு, பவுடர், அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. நெல்லியில் இருந்து 120 வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. நெல்லி உடலில் உள்ள திசுக்களை புதுப்பிக்க வல்லது. ஜூன் முதல் நவம்பர் வரை நெல்லி சாகுபடிக்கு ஏற்ற தருணம். நடும்போது ஓட்டுக்கட்டிய அல்லது மொட்டுக்கட்டிய பாகம் நிலத்தின் மேல் இருக்குமாறு வைத்து நடவு செய்ய வேண்டும். நட்ட உடன் இருபுறமும் மூங்கில் தப்பைகள் ஊன்றி செடியுடன் சேர்த்து கட்ட வேண்டும். பவானிசாகர், கயா, காஞ்சன், கிருஷ்ணா, என்.ஏ.7 போன்ற ரகங்கள் வணிக ரீதியாக சாகுபடி செய்ய ஏற்றது. தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் நெல்லி சாகுபடி செய்ய எக்டேருக்கு 10 ஆயிரத்து 504 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது என் றார்.