/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/எல்லை பிரச்னையால் பரிதவிக்கும் மீட்டான்குளம் கிராம மக்கள்எல்லை பிரச்னையால் பரிதவிக்கும் மீட்டான்குளம் கிராம மக்கள்
எல்லை பிரச்னையால் பரிதவிக்கும் மீட்டான்குளம் கிராம மக்கள்
எல்லை பிரச்னையால் பரிதவிக்கும் மீட்டான்குளம் கிராம மக்கள்
எல்லை பிரச்னையால் பரிதவிக்கும் மீட்டான்குளம் கிராம மக்கள்
ADDED : செப் 03, 2011 12:28 AM
கமுதி : மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால் அடிப்படை வசதிகளின்றி மீட்டான்குளம் கிராமத்தினர் தவிக்கின்றனர்.கமுதி யூனியன் வல்லந்தை பஞ்சாயத்தை சேர்ந்தது மீட்டான்குளம் கிராமம்.
இக்கிராமம் விருதுநகர் -ராமநாதபுரம் எல்லையை பாதியாக கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதி கமுதி யூனியனிலும், மறுபுறம் திருச்சுழி யூனியனையும் உள்ளடக்கியது. இங்கு 160க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களின் தேவையை பூர்த்தி செய்ய எந்த நிர்வாகமும் முன்வரவில்லை.தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் படையெடுப்பதோடு சரி அதன் பின்னர் யாரும் இந்த பக்கம் செல்வது கூட இல்லை. குடிநீர், ரோடு உட்பட அத்தியாவசிய தேவைகள் கூட இங்கு இல்லை. அரசு நிதியோ, திட்டப்பணிகளோ இங்கு சென்றடையவில்லை.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இதே நிலைதான். இங்கு அங்கன்வாடியில் சமையலறை இல்லை. ரோட்டில் சமைக்கும் அவலம் தொடர்கிறது. மழை பெய்தால் குழந்தைகள் பட்டினி தான். இந்த ஆட்சியிலாவது விடிவுகாலம் பிறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.