குறிஞ்சிப்பாடி : தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்பு சங்க மாநில ஆலோசனை கூட்டம் வடலூரில் நடந்தது.
மாநில தலைவர் ராமன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகதாஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளராக செல்வராஜ், கடலூர் மாவட்ட தலைவராக கடல் தனசேகரன், மாவட்ட செயலாளராக ஜெய்சங்கர், மாவட்ட ஒருங்கிணைப்பாளராக தமிழ்செல்வன் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று 5 ஆயிரத்து 200 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இரண்டாம் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ள 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வுப்பட்டியலை வெளியீட்டு, அவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக முதல்வர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.