Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/விவசாயிகள் பட்டறிவு பயணம்

விவசாயிகள் பட்டறிவு பயணம்

விவசாயிகள் பட்டறிவு பயணம்

விவசாயிகள் பட்டறிவு பயணம்

UPDATED : ஜூலை 30, 2011 12:58 AMADDED : ஜூலை 30, 2011 12:56 AM


Google News
தூத்துக்குடி: புதூர் வட்டாரப்பகுதி நீர்வள நிலவளத்திட்டத்தின் கீழ் வேம்பார் ஆறு உபவடி நிலப்பகுதிஎல்விபுரம், புது சின்னையாபுரம், மாவிலோடை ஆகிய கிராம விவசாயிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் முருகவேல் அறிவுரையின்படி,கோவில்பட்டி கோட்ட வேளாண்மை அலுவலர் பொன்னுராஜ் ஏற்பாட்டில் விவசாயிகளை பட்டறிவு பயணமாக தூத்துக்குடி நிலா குளிர் பதனகிடங்கு, உழவர்சந்தை மற்றும் கோயம்புத்துர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் நடைபெற்ற வேளாண்மை உழவர்தின கண்காட்சி, கோவை ஆர்எஸ்புரம் உழவர்சந்தை, சிங்கநல்லூர் உழவர்சந்தை, மற்றும் ஒட்டன்சத்திரம் மொத்த காய்கறி அங்காடிகள் ஆகிய இடங்கள் பார்வையிடப்பட்டது.

இதில் பட்டறிவு பயணத்தில் தூத்துக்குடி வேளாண்மை அலுவலர் ராஜா, திருச்செந்தூர் வேளாண்மை அலுவலர் மணிகண்டன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சரவணக்குமார், சீனிவாசன்,பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us