Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மூன்று விபத்து நான்கு பேர் பலி

மூன்று விபத்து நான்கு பேர் பலி

மூன்று விபத்து நான்கு பேர் பலி

மூன்று விபத்து நான்கு பேர் பலி

ADDED : ஆக 28, 2011 01:19 AM


Google News

பெருந்துறை: பெருந்துறையில் நடந்த மூன்று வெவ்வேறு விபத்துகளில் கணவன், மனைவி உட்பட நான்கு பேர் இறந்தனர்.

* ஊத்தங்கரை, அருகம்பாக்கத்தைச் சேர்ந்த சென்னியப்பன் மகன் முருகன் (33 ). இவர் தன் நண்பர், பெருந்துறை சீனாபுரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் சிவாவுடன் (27 ) பைக்கில், பெருந்துறை கடப்பமடை அருகில் சென்றார். அவ்வழியாக வந்த லாரி மோதியதில் முருகன் இறந்தார்.

* பெருந்துறை, மாந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (46). இவர் தன் மனைவி மாராயியுடன் (35), மொபெட்டில் பெருந்துறை நோக்கி வந்தார். நான்கு வழிச் சாலையை கடக்கும்போது, அவ்வழியாக வந்த, 'டாடா இண்டிகா' கார் ஒன்று மோதியதில் இருவரும் இறந்தனர்.

* விஜயமங்கலம், சேர்வக்காரன்பாளையத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சத்தியமூர்த்தி (28). இவர் மொபெட்டில், விஜயமங்கலம் அருகே சென்ற போது, வேன் மோதி இறந்தார்.

பெருந்துறை இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரிக்கிறார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us