/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மங்களூர் ஒன்றிய தி.மு.க., செயற்குழுக் கூட்டம்மங்களூர் ஒன்றிய தி.மு.க., செயற்குழுக் கூட்டம்
மங்களூர் ஒன்றிய தி.மு.க., செயற்குழுக் கூட்டம்
மங்களூர் ஒன்றிய தி.மு.க., செயற்குழுக் கூட்டம்
மங்களூர் ஒன்றிய தி.மு.க., செயற்குழுக் கூட்டம்
ADDED : ஜூலை 27, 2011 11:14 PM
சிறுபாக்கம் : கழுதூரில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் தி.மு.க.,வினருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மங்களூர் ஒன்றிய தி.மு.க., செயற்குழு கூட்டம் வேப்பூரை அடுத்த கழுதூரில் நடந்தது.
ஒன்றியக்குழுத் தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி., கணேசன், திட்டக்குடி நகர செயலர் பரமகுரு முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் செந்தில் வரவேற்றார்.கூட்டத்தில் கோவையில் நடைபெற்ற பொதுக்குழு, செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி வரும் 1ம் தேதி கடலூரில் நடக்கும் அறப்போராட்டத்தில் மங்களூர் ஒன்றியம் சார்பில் 100 கிளைகளிலிருந்து திரளாக பங்கேற்பது. தி.மு.க., தலைவர்கள் மீது பொய் வழக்கு போடும் போலீசாரை கண்டிப்பது. மங்களூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர்க் கல்வியினை நடைமுறைப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் நிர்வாகிகள் ராஜேந்திரன், அண்ணா துரை, சேகர், செங்குட்டுவன், ராமதாஸ், பாலு, பரமசிவம், இளைஞரணி துணைச் செயலர் சேகர், வேலுச்சாமி பங்கேற்றனர்.