/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர ஒருங்கிணைந்த விவசாயம் செய்ய வேண்டும்: கலெக்டர் "அட்வைஸ்'விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர ஒருங்கிணைந்த விவசாயம் செய்ய வேண்டும்: கலெக்டர் "அட்வைஸ்'
விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர ஒருங்கிணைந்த விவசாயம் செய்ய வேண்டும்: கலெக்டர் "அட்வைஸ்'
விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர ஒருங்கிணைந்த விவசாயம் செய்ய வேண்டும்: கலெக்டர் "அட்வைஸ்'
விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர ஒருங்கிணைந்த விவசாயம் செய்ய வேண்டும்: கலெக்டர் "அட்வைஸ்'
கடலூர் : விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர ஒருங்கிணைந்த விவசாயம் செய்ய வேண்டும் என விவசாயிகளை கலெக்டர் கேட்டுக்கொண்டார்.மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் கெடிலம் உபவடி நிலப்பகுதி விவசாயிகளுக்கான ஒரு நாள் தொழில் நுட்ப பயிற்சி நடந்தது.வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண்மை வணிகம்) தனவேல் வரவேற்றார்.
கூட்டத்தில் கெடிலம் உபவடி நிலப்பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.பயிற்சியை துவக்கி வைத்து கலெக்டர் அமுதவல்லி பேசியதாவது:மனித இனம் தோன்றியதிலிருந்து இன்று வரை அத்தியாவசிய தேவை உணவு என்பதால் விவசாயம் மிகவும் அவசியமாகும்.அனைத்து துறைகளிலும் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. ஆனால் வேளாண்மை துறையில் மாறாத ஒன்றாக இருந்து வருகிறது.தமிழக அரசு வேளாண்மை துறையில் பல்வேறு தொழில் நுட்ப திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயிகள் இதை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.விவசாயிகள் ஒன்றிணைந்த விவசாயம் செய்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள இந்த தொழில் நுட்ப பயிற்சியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு கலெக்டர் அமுதவல்லி பேசினார்.வோண்மை அலுவலர் சுரேஷ் நன்றி கூறினார்.