ADDED : ஜூலை 19, 2011 12:24 AM
அரூர் : அரூர் அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில், 13 ஆடுகள் இறந்தன.
அரூர் அடுத்த மொரப்பூர் கூச்சனூரை சேர்ந்தவர் விவசாயி பன்னீர் (52). இவரது விவசாய நிலத்தில் பட்டி அமைத்து, 30 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று, இவரது ஆடு பட்டியில் புகுந்த வெறிநாய்கள், அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதில், 13 ஆடுகள் இறந்தன. இதன் மதிப்பு 40 ஆயிரம் ரூபாய். வெறிநாய் கடித்து, ஆடுகள் உயிரிழந்தற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயி பன்னீர் கோரிக்கை விடுத்துள்ளார்.