/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பள்ளி பஸ் மோதி சிறுவன் பலி கிராமத்தினர் மறியல்பள்ளி பஸ் மோதி சிறுவன் பலி கிராமத்தினர் மறியல்
பள்ளி பஸ் மோதி சிறுவன் பலி கிராமத்தினர் மறியல்
பள்ளி பஸ் மோதி சிறுவன் பலி கிராமத்தினர் மறியல்
பள்ளி பஸ் மோதி சிறுவன் பலி கிராமத்தினர் மறியல்
ADDED : செப் 03, 2011 12:22 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் வி.பி.எம்.எம்.மெட்ரிக் பள்ளி பஸ் மோதி, பள்ளி வளாகத்திலே சிறுவன் பலியானான்.
பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில்,இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சீல்நாயக்கன்பட்டி பதினெட்டாம்படி கருப்பசாமி மகன் செல்வராகவன், 4 . கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மெட்ரிக் பள்ளியில் பிரிகேஜி படித்து வந்தான். நேற்று காலை 9 மணிக்கு பஸ்சில் வந்த இவன், பள்ளி வளாகம் வந்ததும், முன்பக்க வழியாக இறங்கிய போது, டிபன் பாக்ஸ் கிழே விழுந்தது. அதை எடுக்க குனிந்த போது, பஸ் மோதி இறந்தான். பஸ்சை , கொந்தயம்பட்டியை சேர்ந்த டிரைவர் கந்தசாமி ஓட்டினார் . பள்ளி வளாகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் , பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதில் ஒரு பிரிவினர், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை ஸ்ரீவி., டவுன் எஸ்.ஐ., காளிராஜன் தலைமையில் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். கைக்குழந்தையுடன் மறியலில் ஈடுபட்ட ரத்தினமாரி, பாலகுமார், அங்கம்மாள், சுப்பையா காயமடைந்தனர். ஆத்திரமடைந்த கிராம மக்கள், 'எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த மாணவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்,' எனக்கோரி , உடலை வாங்க மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடுதல் எஸ்.பி., சாமிநாதன், முனுசாமி ஆர்.டி.ஓ., பேச்சு வார்த்தை நடத்தினர். இழப்பீடு தரவும், எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்கப்படும், என கூறியதையடுத்து, சிறுவன் உடலை உறவினர்கள் வாங்கி சென்றனர்.


